​​​​

Total Visitors






OUR SHOPPY SPL











OUR POPULAR LINKS






RECENT UPDATE








​​


​    @Shri online shopping

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


Leave  Ur comment:

​​ Copyright  @ Illanthalir.com

Blazing titles




  

















ஆஞ்சநேயர் கோயில்- Hanman temples

அனுமன் அருள் பாலிக்கும் தலங்கள்

 

   Like Us









 அனுமனைவணங்குவதன் பலன்



அனுமனைவணங்குவதன் பலன்:

அனுமனை வணங்குவதால்,புத்தி, பலம், புகழ், குறிக்கோளை
எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம்,ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம்.


கிருஷ்ணனுக்கும்பிரியமானவர்: அனுமன் ராமனுக்கு மட்டுமல்ல!
ராமாவதாரத்தை அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்தில்.அர்ஜீனனின் கொடியில் இருந்தவர் அவர். அவரது முன்னிலையிலேயே.
கிருஷ்ணன் கீதையைப் போதித்தார்.


கண் கொடுக்கும் ஆஞ்சநேயர்: 

காஞ்சிபுரம்வரதராஜப்பெருமாள் தேரடியின் கீழ் கண்கொடுக்கும் ஆஞ்சநேயர்அருள் பாலிக்கிறார். வெண்பாப்புலி வேலுசாமி பிள்ளை என்பவர் ஆஞ்சநேயபுராணம்என்ற துதிபாடி இழந்த பார்வையை மீண்டும்பெற்றார்.
 
          ஆசியாவின் முதல் நவ ஆஞ்சநேயர் கோயில்:


மதுரையிலிருந்து (32 கி.மீ) திண்டுக்கல்செல்லும் 4 வழிப்பாதையில் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டையில்நவ ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. கோயில்வாசலில் தெற்கு நோக்கி 23 அடி
உயர ஆஞ்சநேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார்.மூலவர் ஜெயவரத ஆஞ்சநேயர் கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறார். அவரைச்சுற்றி தெற்கு, மேற்கு, வடக்காக


பக்த ஆஞ்சநேயர்,
பால ஆஞ்சநேயர்,
பவ்யஆஞ்சநேயர்,
யோக ஆஞ்சநேயர்,
தியானஆஞ்சநேயர்,
வீர ஆஞ்சநேயர்,
பஜனஆஞ்சநேயர்,
தீர ஆஞ்சநேயர் அருள்பாலித்துவருகின்றனர்.


பெருமாள்அருகில் அனுமன்

ராமர் அருகில் மட்டுமல்லாமல் தேனிக்கருகிலுள்ள சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்மூலஸ்தானத்தில் பெருமாள் அருகிலும் அனுமனைத் தரிசிக்கலாம்.

கீதைக்குஉரை எழுதியவர்: கீதைக்கு பலர் உரை எழுதியுள்ளனர்.
பைசாசம் என்ற மொழியில், ஆஞ்சநேயர்கீதைக்கு பாஷ்யம் (விளக்கவுரை) எழுதியதாகச் சொல்வர்.


இலக்கணபட்டதாரி: சிறந்த கல்விமானான அனுமனை.
நவ வ்யாகரண வேத்தா என்பர்.அதாவது. அவர் ஒன்பது வகையான
இலக்கணத்தையும் படித்தவர். புத்தி, சக்தி இரண்டும்அவரிடம் இருந்தது.



ஒரே சிலையில் மூன்று வடிவம்:

உ.பி. கான்பூரிலிருந்து 8 கி.மீ. தூரத்திலுள்ள பங்கி ஆஞ்சநேயர் கோயிலில், காலையில் அனுமன் குழந்தை வடிவிலும்,மதியம் இளைஞனாகவும், மாலையில் வீர புருஷராகவும் காட்சி தருகிறார்.


சயன  ஆஞ்சநேயர்: 

மகாராஷ்டிரா,அவுரங்காபாத் மாவட்டத்தில் மரத்வாடா பகுதி குல்தாபாத்தில் உள்ளபத்ர மாருதி கோயிலில் அனுமன்
கட்டிலில் படுத்த நிலையில் சயனகோலத்தில் அருள்பாலிக்கிறார்.


நோயற்றவாழ்வு அருளும் 32 அடி ஆஞ்சநேயர்:

நவக்கிரகத்தில் குரு தலமான ஆலங்குடிக்கு அருகில்உள்ள ஞானபுரியில் 32 அடி உயர ஆஞ்சநேயர்அருள்பாலிக்கிறார். இவரது இடுப்பு வஸ்திரத்துக்குள்சஞ்சீவி மலையில் உள்ள நான்கு
பிரதான மூலிகைகள் இருப்பது சிறப்பு.  இத்தகையஆஞ்சநேயரை எவர் ஒருவர் தரிசித்தாலும்,எந்த ஒரு வியாதியும் குணமாகி
விடும் என்பதே இதன் தாத்பர்யம்.


சங்கடங்களைப் போக்கி மங்களத்தை அருள்வார்என்கிற அர்த்தத்தில் இவருக்கு ஸ்ரீசங்கட ஹர மங்கள மாருதிஎன்று திருநாமம் சூட்டப்பட்டுள்ளது





வீரமங்களஆஞ்சநேயர்:

நாகப்பட்டினத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில்உள்ள பொரவச்சேரி ராமபத்ர பெருமாள் கோயிலில்னிசன்னதியில் வீரமங்கள ஆஞ்சநேயர். வலது காலைத் கிழக்குநோக்கி தொங்கவிட்டு இடது காலை திருநள்ளாறைநோக்கி வடக்கு நோக்கி மடித்துவைத்த நிலையில் தரிசனம் தருகிறார். இவரதுமார்பில் ராமர் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.மேலும் ராமர் மூலஸ்தானத்தில் ராமருக்கு
அருகிலும் ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் இத்தலத்தின்சிறப்பு.

இக்கோயில்தமிழகத்தின் பழம்பெருமை வாய்ந்த ஏழு ராமர்
கோயில்களில் ஐந்தாவது கோயிலாக கருதப்படுகிறது.























சின்னாளப்பட்டிஅஞ்சலி வரத ஆஞ்சநேயர்:.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி, மேட்டுப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர்திருக்கோயிலில்20,21.12.2014 ஆகிய இரண்டு தினங்களில் ஹனுமத்ஜெயந்தி வைபவம் நடைபெறுகிறது. 20ம்தேதிகாலை 8 மணிக்கு பஞ்ச சூக்தஹோமம் முதல் , 21ம்தேதி மாலை 6 மணிஞூகு  1008 ஜிலேபிமாலை வஜ்ர அங்கி கவசசேவையுடன்  நடைபெறுகிறது.


துஷ்டநிக்ரஹஅனுமன்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மலைக்கோட்டை செல்லும் வழியில் உள்ள சிறு குன்றில் துஷ்ட நிக்ரஹ அனுமான் அருள்பாலிக்கிறார்.
வலது கை பக்தர்களின் துன்பங்களைஅறைந்து விரட்டுவது போல வடிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கஒரு பெயர்:

அனுமனை கர்நாடகத்தில் ஹனுமந்தையா,

ஆந்திராவில் ஆஞ்சநேயலு,

மகாராஷ்டிராவில் மாருதி,

சில வடமாநிலங்களில் மகாவீரர் என்று அழைக்கின்றனர்.
 
கெடாத வடைமாலை: 

சிவகங்கைமாவட்டம் மானாமதுரையிலுள்ள வீர அழகர் கோயிலில்
உள்ள வீர  ஆஞ்சநேயருக்குபக்தர்கள் அணிவிக்கும் வடைமாலை நீண்டநாள் கெடுவதில்லை.


வாயைப்பொத்திய ஆஞ்சநேயர்:

ராமனின் முன்பு தலையைக்குனிந்து, வாய் பொத்தி, மிகுந்த
மரியாதையுடன் உள்ள  அனுமன்சிலை கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் ராமசாமி கோயிலில் உள்ளது.


ராமநாமமகிமை:

ராமநாம சொன்னால் பாவம்
தீரும். மரணத்தின் விளிம்பிற்கு செல்பவர்கள் நலன் பெறுவார்கள். அனுமன் ஓயாமல் ராம நாமம் சொன்னதால்தான், கடலைத் தாண்ட முடிந்தது.முடியாததையும் முடித்து வைப்பது ராம நாமம்.