Like Us









​​ Copyright  @ Illanthalir.com

Home remedies or Paatti vaithyam













OUR LINKS

.  




LATEST DAILY RECIPES AND BEAUTY TIPS,VISIT

WWW.ILLANKATHIR.COM


LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


Leave  Ur comment:

​​​​

Total Visitors


















OUR POPULAR LINKS






RECENT UPDATE








​​


​    @Shri online shopping

loading...

OUR SHOPPY SPL












காய்ச்சிய பசும்பாலில் மஞ்சள், மிளகுப் பொடி பனங்கற்கண்டு சேர்த்து இரவில் அருந்தினால் இருமல் குணமாகும். கற்கண்டுடன் ஜீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் குணம் தெரியும்.



வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை ஒரு தேக் கரண்டி சாப்பிட, வயிற்றின் சுற்றளவு குறையும்.



காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.



கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.



சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு,துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.



இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.



சாப்பிடும் முன் இளநீர் அருந்தினால் பசிக்காது. சாப்பிட்டபின் அருந்தினால் பித்தம் நீங்கும் மலச்சிக்கல் தீரும். நாள் பட்ட இளநீரை குடித்தால் சளி ஏற்படும்.



மிளகாயுடன் பத்து துளசி இலைகளை சேர்த்து சாப்பிட சளி போகும்.



வயிற்றுவலியா? ஒரு டம்ளர் கொதிநீரில் 1 டேபிள் ஸ்பூன் தேனைக் கலந்து குடித்தால் 1/4 மணி நேரத்தில் வலி பறந்துவிடும்.



மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.



கற்கண்டை வெண்ணெயுடன் சேர்த்து நாற்பது நாட்கள் சாப்பிட மெலிந்த உடல் பருக்கும்.



தொண்டை கட்டிக்கொண்டு குரல் எழாமல் சிரமப்படுபவர்கள் கற்பூர வல்லியை சாறெடுத்து பனங்கற்கண்டு சேர்த்துப் பருக சரியாகும்



துவரம் பருப்பை வேகவைத்த தண்ணீரை டம்ளர் எடுத்து, சிறிது வெல்லம் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட பூச்சிகள் வெளியேறும்.



சர்க்கரை சேர்க்காத கடுங்காப்பியை காலையில் குடித்து வந்தால் ஜலதோஷம் குறையும்


ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.



மாமரத்தின்தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்து கொள்ளவும். 1 ஸ்பூன் வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.



அத்திபட்டை,நாவல் பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை சமஅளவு பொடி செய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீதபேதி பெரும்பாடு குணமாகும்.



அத்திபாலை பற்று போட்டு வர மூட்டுவலி குணமாகும்.



தினசரி 1 மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.



மாவிலையை பொடி செய்து பல் துலக்கினால் பற்க���் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.



உடல் அசதியா? முருங்கை இலை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் குணமாகும்.



காய்ச்சிய வேப்ப எண்ணை தடவி வர சேற்றுபுண் குணமாகும்.



அத்திப்பழம் முறையாக 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.



மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த ! வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400, பசுநெய், அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனைநாள்தோறும் 1 கரண்டி 6 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.



குறிஞ்சி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.




இஞ்சி எலுமிச்சை சாற்றை தண்ணிரில் கலந்து காலையில் அருந்த குணமாகும். எலுமிச்சை சாறைத் தினமும் பருகி வந்தால் காலரா அண்டாது.


கருப்பைகோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம். அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.



கரிசலாங்கண்ணி கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரைசாறு 30 மில்லி எடுத்து இரண்டையும்ஒன்றாக கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்பநிலை புற்றுநோய் குணமாகும்.



ஆற்றுத்தும்பட்டியைமூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுமோரி மெழுகை கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த அத்தனை கோளாறுகளும் தீரும்.



பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.



அசோகமரப்பட்டை,மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை கோளாறுகள் குணமாகும்.



ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.



பல்வலிக்கு கிராம்பு தைலம் சிறப்பான மூலிகை மருந்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கிராம்பு தைலத்துடன் ஒரு சிட்டிகை மிளகு தூள் கலந்து, பல்லின் பாதிக்கப்பட்ட பகுதியின் மேல் வைக்கவேண்டும். கடுகு எண்ணை, பல் வலியை குறைக்க மற்றொரு இயற்கையான நிவாரணி. கடுகு எண்ணையுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து பாதிக்கப்பட்ட ஈறுகளின் மேல் தடவ வேண்டும்.



எலுமிச்சைசாரின் பல துளிகள் பல் வலியை குறைக்கலாம். வெங்காயத்தின் ஒரு துண்டை பாதிக்கப்பட்ட ஈறு அல்லது பல் பகுதியின் மேல் வைப்பதன் மூலம் பல் வலியை சிறப்பாக குறைக்கமுடியும். சாமந்தி, வேலம், போன்ற மூலிகை மருந்துகளை கொண்டு நீங்கள் வீட்டிலேயே பல் வலியை சரியாக்கவாய்கொப்பளிக்கும் நீரை தயாரிக்கலாம். துளசி, மற்றும் பெருங்காயம் போன்றவையும் உபயோகமான மருத்துவ மூலிகைகள்.



பல்வலியை சற்று குறைக்க வெளிபுரமாக சாதரன ஐஸ் கட்டிகளை உபயோகிக்கலாம். திடீரென்று நீங்கள் பல் வலியால் பாதிக்கப்பட்டால், மிகவும் சூடான, மிகவும் குளிர்ச்சியான, மற்றும் இனிப்பான உணவுகளை தவிர்கவும். இவைகள் வலிக்கும் பல்களை மேலும் பாதிக்கும் நீங்கள் உங்கள் உணவை பற்றி கவனமாக இருக்கவேண்டும். அதிகமாக காய்கரிகள், பழங்கள், தானியங்கள் போன்றவைகளை சாப்பிட வேண்டும். மாவு உணவுகளை தவிர்க்க வேண்டும்.



நெல்லிகாயை நிறைய வாங்கி வெயிலில் காய வைத்து எடுத்து வைக்கலாம். இதை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வைத்து கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். முளைச்சூடு குறையும். கூந்தல் கரு கரு வென செழித்து வளரும். முடிகளை வலுவாக்கும் பொடுகும் வராது.



அத்திக்காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும். அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.



ஏலம்,சுக்கு, கிராம்பு, சீரகம் தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம்குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும். கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.



வயிற்றுப் புண்ணை ஆற்றும் வித்தை கீரைகளுக்கும் உண்டு. மணத்தக்காளி, வெந்தயக் கீரை அல்லது அகத்தி இதில் ஏதாவது ஒரு கீரையை சுத்தம் செய்து கழுவி நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்புடன் சின்ன வெங்காயம், சீரகம், மஞ்சள் ஆகியவற்றுடன்கீரை சேர்த்து வேக வைத்து கடைந்து கொள்ளவும். அத்துடன் கடுகு, காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை தாளித்து கூட்டாகப் பரிமாறலாம்.



கீரைவகைகளில் ஒன்றைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அத்துடன் இரண்டு பல் பூண்டு, சீரகம், மஞ்சள் மற்றும் உப்பு, சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்பைக் குடிக்கலாம். பூசணிக்காயில் இருந்து விதையினை நீக்கவும். தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவும். இத்துடன் மிளகு, சீரகம், உப்பு அல்லது சர்க்கரை கலந்து அப்படியே சாப்பிடலாம். தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டால் குடல் புண் குணமாவதை உணர முடியும்.



வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.



மல்லி விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.


Previous 1 2 next