Blazing titles




 

   Like Us









​​​​

Total Visitors






​​ Copyright  @ Illanthalir.com

OUR SHOPPY SPL











OUR POPULAR LINKS






  

















Leave  Ur comment:

RECENT UPDATE








​​


​    @Shri online shopping

Mushroom Birayani​-காளான் பிரியாணி



  • காளான் - அரை கிலோ,
  • பாஸ்மதி அரிசி - 2 கப்,
  • பெரிய வெங்காயம் - 1,
  • தக்காளி - 2, இஞ்சி,
  • பூண்டு விழுது  - 2 டீஸ்பூன்,  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை - அரை கப்,
  • பொடியாக நறுக்கிய புதினா இலை - கால் கப்,
  • பொடியாக  நறுக்கிய பச்சை மிளகாய் - 3,
  • எண்ணெய், நெய் - தலா 3 டேபிள்ஸ்பூன்,
  • தேங்காய்ப் பால் - அரை கப்,
  • தண்ணீர்- 3 கப்,
  • தயிர் - 2  டேபிள்ஸ்பூன்,
  • உப்பு - தேவைக்கேற்ப,
  • மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்,
  • தனியா மற்றும் சீரகத் தூள் (சேர்த்து) - 2 டீஸ்பூன்,
  • வெங்காய  விதைத் தூள் - கால் டீஸ்பூன்,
  • மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், பிரியாணி  இலை - 1,
  • பட்டை - 2,
  • கிராம்பு - 5,
  • ஏலக்காய் - 3.
 

 

  • காளான்களை சுத்தமான, ஈரத்துணியால் சுத்தப்படுத்தவும். நீளத்துண்டுகளாக நறுக்கவும். 
  • பாசுமதி  அரிசியையும் ஊற வைக்கவும். அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய், நெய் சேர்த்து  சூடாக்கவும்.
  • பிரியாணி  இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும். நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்துக்கு  வதக்கவும்.
  • பச்சை மிளகாய்,  கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதும்,  பொடியாக நறுக்கிய தக்காளியும் சேர்த்து மசியும் வரை  வதக்கவும். காளான் துண்டுகளைச் சேர்க்கவும். மஞ்சள், மிளகாய், தனியா, சீரகத் தூள்கள், வெங்காய விதைத் தூள்,  தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து, கிரேவி பதம்  வரும் வரை கிளறவும்.
  • தண்ணீரை வடித்து, அரிசியை ரைஸ் குக்கரில் சேர்க்கவும். கிரேவி,  தண்ணீர், தேவைப்பட்டால் சிறிது உப்பு  சேர்த்துக் கிளறி, குக்கரை ஆன் செய்யவும்.
  • கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM