Leave  Ur comment:

​​​​

Total Visitors


 

   Like Us

​​ Copyright  @ Illanthalir.com

ஓணம் பண்டிகை
கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது "ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.
கேரளாவில் ஓணம் திருவிழா பத்து நாட்கள் நடக்கும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரையில் விழா நடத்தப்படும். தங்கள் நாட்டை சிறப்புடன் ஆண்ட மன்னர் மகாபலியை வரவேற்கும் விதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அஸ்தம், சித்திரை, சுவாதி நட்சத்திர நாட்களில் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர். நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் 64 வகையான உணவு தயாரித்து சாப்பிடுவர்.ஐந்தாம் நாள் அனுஷத்தன்று பாரம்பரிய முறையில் படகுப்போட்டி நடக்கும்.ஆறு,ஏழு, எட்டு, ஒன்பதாம் நாட்களான கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம் நட்சத்திரங் களில் ஓண ஊஞ்சல் ஆடுதல், மலர்களால் கோலமிடுதல், வீட்டை அலங்கரித்தல் ஆகியவற்றைச் செய்வர். பத்தாம் நாளான ஓணத்திருவிழாவன்று மூவகை பாயாசம், விருந்து உணவு செய்து விஷ்ணுவை வழிபடுவர். எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரையப்பன் கோயிலில், வாமனருக்கு சிறப்பு பூஜை நடக்கும். இக்கோயிலில் மகாபலி அமர்ந்து ஆட்சி புரிந்த சிம்மாசனம் உள்ளது.

 

ஓண சத்ய: ஓணத்தன்று கேரள மக்கள் சாப்பிடும் உணவை ஓண சத்ய என்று குறிப்பிடுவர். இதற்கு ஓண விருந்து என்று பொருள். கேரள பகுதியில் உணவில் புட்டு, கிழங்கு, பயறு போன்றவை தான் வழக்கமாக இடம் பெற்றிருக்கும். ஓணத்தன்று அரிசி மாவில் அடை, அடை பிரதமன், அவியல், பால் பாயாசம், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு என கேரளத்துக்கே உரித்தான உணவுகள் தயார் செய்யப்பட்டு, இஷ்ட தெய்வங்களுக்குப் படைத்து நண்பர்கள், உறவினர்களுடன் உண்பர்.

ஓணம் பண்டிகையில் பூக்கோலம்


Image result for ONAM IMAGES


ஓணம் பண்டிகையில் இடம் பெறும் பூக்கோலம் பிரசித்தம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகிய பூக்களால் கோலத்தை அலங்கரிப்பர். மகாபலி மன்னரை வரவேற்கும் விதத்தில் வாசலில் பூக்கோலம் இடம் பெறுகிறது. நறுமணம் கமழும் பூக்களைப் போல உள்ளத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே இக்கோலத்தின் நோக்கம். மனதைக் கவரும் இக்கோலங்கள் கேரளத்தின் கலைநயத்தை பறைசாற்றுகிறது.


  

OUR SHOPPY SPLOUR POPULAR LINKS


Blazing titles
RECENT UPDATE
​​


​    @Shri online shopping

OUR LINKS

.  

LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM