OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


Leave  Ur comment:

​​ Copyright  @ Illanthalir.com

OUR SHOPPY SPL











RECENT UPDATE








​​


​    @Shri online shopping

​​​​

Total Visitors






Blazing titles




  

















OUR POPULAR LINKS






 

   Like Us









சஷ்டி விரதம்

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது விரதம் இருக்கலாம். சஷ்டியன்று விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.


முருகனுக்கு பல்வேறு விரதங்கள், உற்சவங்கள், வழிபாடுகள் இருந்தாலும் அவை எல்லாவற்றிலும் சிறப்பானதாக சஷ்டி விரதம் கூறப்பட்டுள்ளது. ‘சட்டியில் இருந்தால் ஆப்பையில் வரும்’ என்பார்களே, அது கந்த சஷ்டி விரத மகிமையை வெளிப்படுத்தும் வகையில் உருவானதுதான். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்ற வாக்கியமே மருவி இவ்வாறு மாறியிருக்கிறது. அதாவது, சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் சிசு தோன்றும். சஷ்டியில் விரதம் இருந்து முருகப் பெருமானை மனதார வேண்டினால் சற்புத்திர யோகத்தை அருள்வார்.


அகப்பை என்பது கருப்பையை மட்டுமல்ல, நமது ‘அகம்’ என்கிற மனத்தையும் குறிக்கிறது. நம் மனதில் இருக்கிற பேராசை, வெறுப்பு, ஆணவம், கோபம், வஞ்சம் தீர்த்தல், கருமித்தனம் உள்பட பல்வேறு தீய குணங்களையும் அழித்து நமக்கு நல்வழி காட்டுகிறார் முருகப் பெருமான். முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. இந்நாட்களில் விரதம் இருந்து முருகனை வழிபடுவது சகல தடைகளையும் நீக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.


நீர் விரதம், பால் விரதம், மவுன விரதம் என பலவகை விரதங்கள் உண்டு. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகளையும் கந்த சஷ்டியன்று செய்வார்கள்.


முருகப் பெருமானுக்கு வார - நட்சத்திர- திதி என மூன்று விதமான விரதங்கள் உண்டு. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் - வருடந்தோறும் சஷ்டி திதி விரதம் ஆக மூன்று. இவற்றில் சஷ்டி விரதம் என்பது, ஐப்பசி மாத-வளர்பிறை பிரதமையன்று ஆரம்பித்து சஷ்டி வரை விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதைக் குறிக்கும். இந்த ஆறு நாட்களும் எதுவும் சாப்பிடாமல் இருந்து கருத்தையெல்லாம் கந்தக் கடவுளிடம் செலுத்தி வழிபடுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள். ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், போன தலைமுறை வரை, பாரெங்கும் போய்ப் பன்னிருகை பரமனின் புகழையும் பைந்தமிழின் பெருமையையும் விதையிட்டு வளர்த்து வந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் சஷ்டி விரத நாட்கள் எல்லாம், தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருப்பார். இவ்வாறு ஆறு நாட்களும் எதுவும் உண்ணாமல் இருக்க முடியாதவர்கள், சஷ்டி நாளன்று மட்டுமாவது உபவாசம் இருப்பது நன்மையைத் தரும். மற்ற நாட்களில் பலகாரம் சாப்பிடலாம்.


பலகாரம் என்ற சொல்லுக்கு, பல ஆகாரங்களை வயிற்றுக்குள் தள்ளுவது என்பது பொருளல்ல. பழங்களே ஆகாரமாக இருப்பதுதான் பலகாரம் எனப்படும். அதாவது ‘பழகாரம்’. ஆகையால், ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், சஷ்டியன்று மட்டுமாவது உபவாசமிருந்துவிட்டு, மற்ற நாட்களில் பழம்-பால் உண்ணலாம். அடுத்து, விரதம் இருப்பவர்கள்








முடிந்தால் - காவிரி முதலான ஆற்றுக்கருகே வசித்தால், அந்த நதியின் நீரோட்டத்திற்கு எதிரே நின்றபடி தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் ஆறெழுத்து மந்திரத்தை எழுதி, அதன் நடுவில் ஓம் என்னும் பிரணவத்தை எழுதி, முருகப் பெருமானைக் கருத்தில் வைத்து நீராட வேண்டும்.


கிணறு, குளம், வீடு முதலிய இடங்களில் நீராடும்போது, வடக்கு திசை பார்த்தபடி நின்று, மேலே சொன்ன முறைப்படிச் செய்து குளிக்க வேண்டும். சஷ்டி விரதம் இருப்பவர்கள் அந்த ஆறு நாட்களிலும், சுப்பிரமணிய புஜங்கம், ஸ்கந்த வேத பாத ஸ்தவம், ஷண்முக ஷட்கம், சுப்பிரமணிய பஞ்சரத்னம், திருப்புகழ், கந்த சஷ்டி கவசங்கள் ஆறு, ஷண்முக கவசம், கந்தபுராணம் முதலான நூல்களைப் பாராயணம் செய்வது, வறுமையைத் தீர்த்து வளமையைக் கூட்டும்.


மனதை ஒருமுகப்படுத்தி இவற்றை சொல்லி முருகனை துதிப்பது நற்பலன்களை தரும்.


ஜாதக அமைப்பின்படி செவ்வாய் திசை, குரு திசை நடப்பவர்கள், நிலப் பிரச்னை, சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு, சொத்து பிரச்னை, குழந்தை பாக்ய தடை உள்ளவர்கள் கந்த சஷ்டி விரதம் இருந்து சூரசம்ஹார தரிசனம் செய்தால் சூரனை வேல்கொண்டு அழித்ததுபோல நமது பிரச்னைகளையும் கந்தப்பெருமான் வேலாய் வந்து நின்று அழித்து வளமிகுந்த வாழ்வை அருள்வார் என்பது நம்பிக்கை.


முருகனை குறித்து செய்யப்படும் அர்ச்சனையில் ‘சஷ்டிப் பிரியாய நம’ என்று வரும். சஷ்டிப் பிரியனான முருகனை கந்தசஷ்டியன்று வழிபடுவோம். சகல நலன்களும் பெறுவோம்.