Leave  Ur comment:

​​​​

Total Visitors






 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

​​Spritual-Temples for all kind of amend and demands


​​


சனி தோஷம் அகல

சனி கிரக தோஷத்தால் அவதியுறுபவர்கள் திருநாகேஸ்வரம் சமீபத்தில் உள்ள உப்பிலியப்பன் பெருமாளை வணங்கி பிரார்த்திக்க, அதிலிருந்து விடுபட முடியும்.

பதவி உயர்வு பெற 

திருத்தணியிலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள நல்லாட்டூர் திருத்தலத்தில் காட்சி தரும் ஆஞ்சநேயருக்கு முறைப்படி பூஜை செய்வோர் உயர் பதவியை அடைவார்கள்.

கடன்கள் தீர 

கடன் வாங்கி அடைக்க முடியாத வர்கள்  நாடி வேண்ட வேண்டிய திருக்கோயில் பெங்களூர் விஸ்வேஸ் வரபுரத்தில் இருக்கும் பெரிய முருகன் கோயிலில் உள்ள, தனிச் சந்நதி கொண்டுள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அர்ச்சனை புரிய, கடனிலிருந்து அவர்கள் விடுபட இயலும்.

ஞாபக சக்தி பெருக 

பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரம் என்ற இடத்தில் (பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ.) கேம் பிரிட்ஜ் பள்ளிக்கு சமீபம் அமைந்துள்ள ஆலயத்தில் அன்னை காயத்ரி கொலு வீற்றிருக்கிறாள். தங்கள் ஞாபக சக்தி அபரிதமாக, அந்தக் கோயில் சென்று விசேஷ ஆராதனை, பூஜை புரிய அப்பேறு கிடைக்கும்.

கோரிக்கைகள் நிறைவேற 

பிறருக்கு பாதிப்பில்லாத நல்ல கோரிக்கைகளைக் கொண்டோர், அவை நிறைவேற நாட வேண்டிய திருக்கோயில் மேல்மருவத்தூரில் உள்ள ஆதிபராசக்தி பீடமாகும். ​


மங்கலகரமான இறைவன் மாங்கல்ய வரம் அருளும் இடம் தான் திருமணஞ்சேரி.

நாக, புத்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்க நாச்சியார் கோவில் கல் கருடன்


* காரியங்கள், திருமணம் கைகூட திருநந்திபுர விண்ணகரம் நாதன் கோவில்








* கடும் வியாதிகளின் இருந்து விடுபட கும்பகோணம் பாணபுரீஸ்வரர்

* கடும் ஜூரம் விலகிட காளகஸ்தீஸ்வரர் திருக்கோவில் ஜூரகேஸ்வரர்

* பிரிந்த தம்பதியர் ஒன்று சேர கும்பகோணம் ஆதிவராகப் பெருமாள்

* ராகு தோஷம், எம, மரண பயம் நீங்க திருநீலக்குடி எனும் தென்னலக்குடி

* மாங்கல்ய பலம் பெற, நோய்கள் தீர திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்

* குழந்தைகளின் நோய் தோஷங்கள் தீர சிவபுரம் எனப்படும் திருச்சிவபுரம்

* விஷக் கடியில் இருந்து நிவாரணம் பெற அழகாபுத்தூர் சங்கு சக்கிர முருகன் க்கு செய்துவிட்டு பின்பு சில ஏழைகளுக்கேனும் அன்னதானம் புரிய நற்பலன் கிட்டும்










 

  

















OUR POPULAR LINKS






RECENT UPDATE








​​


​    @Shri online shopping

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


OUR SHOPPY SPL











Blazing titles