Leave  Ur comment:

​​​​

Total Visitors


 

   Like Us

​​ Copyright  @ Illanthalir.com

மதநல்லிணக்கத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோயில்

கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தென்னகத்தின் தொண்டை மண்டலத்தில் களப்பிரரின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பல்லவ அரசன் சிம்ம விஷ்ணு, முதலாம் மகேந்திர வர்மன், மாமல்லன் எனும் முதலாம் நரசிம்ம வர்மன், முதலாம் பரமேஸ்வர வர்மன் ஆகியோர் இக்கோவிலை பராமரித்து வந்தாலும் அதற்கான கல்வெட்டுகள் அழிந்து விட்டன. பல்லவ அரசன் ராஜசிம்மன் இக்கோயிலை புனரமைத்த தகவல் மட்டுமே உள்ளது. ராஜசிம்மனுக்கு பிறகு வந்த அரசர்களில் இரண்டாம் நந்திவர்ம பல்லவ வர்மன் வைணவனாகவும், மூன்றாம் நந்திவர்மன் சிவனடியாராகவும் ஆனதாலும், அவர்களுக்கு பின் ஆட்சி நடத்திய நிருபதுங்க வர்மன் மேற்கொண்ட அரசியல் மாற்றத்தினாலும் பல்லவ நாடு முழுவதும் சோழ மண்டலத்தின் ஒரு பாகமாக விஜயாலய சோழ மன்னனான ஆதித்த சோழனால் மாற்றப்பட்டதாலும் திருப்போரூர் கோயிலுக்கு முக்கியத்துவம் இல்லாது போயிற்று.இக்கோயில் குறித்த 7 கல்வெட்டுகளும், ஒரு செப்புப் பட்டயமும் தற்போது திருப்போரூர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 


அந்த செப்பு பட்டயத்தில் கோவளம் என்ற இடத்தை ஆண்டு வந்த ஆற்காடு நவாப் திருப்போரூர் கோயிலின் இரண்டாம் பட்டமான சிவசங்கர தேவரை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சிவசங்கர தேவரை கொடுமைப்படுத்தியதால், நவாப் மனைவிக்கு தீராத சூலை நோய் (வயிற்றுவலி) ஏற்பட்டு அவதியுற்றதை கண்ட சிவசங்கர தேவர் சுவாமிகள் திருநீறு கொடுத்து முருகனை வணங்கச் சொன்னார். அதன்படி செய்ததும் வயிற்று வலி குணமானது. இம்மகிமையை உணர்ந்த ஆற்காடு நவாப், சிவசங்கர தேவரை விடுதலை செய்ததோடு திருப்போரூர் முழுவதையும் கோயிலுக்கு தானமாக கொடுத்ததாகவும், ஏராளமான தங்க, வெள்ளி காசுகளை நன்கொடையாக கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கோயில் வளாகத்தில் தெய்வானை அம்மன் சன்னதி அருகே ஆற்காடு நவாப் மற்றும் அவரது மனைவியின் உருவச்சிலைகள் தூண் ஒன்றில் வடிக்கப்பட்டுள்ளது.இந்து கோயில் ஒன்றில் முஸ்லிம் மன்னர் ஒருவரின் சிலை பொறிக்கப்பட்டு 400 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கோயில் மத நல்லிணக்கத்திற்கு ஆதாரமாக விளங்கி வந்துள்ளது வியக்கத்தக்கது.

கோயில் கட்டும்போது கிளியனூர் மூதாட்டி ஒருவர் ஒரே ஒரு பொற்காசு கொடுத்த தகவலும், சென்னை பாளையத்தார் செட்டியார் ஒருவர் இரு மூட்டைகள் நிறைய வராகன்கள் (பொற்காசு) கொடுத்த தகவலும் கல்வெட்டில் காணப்படுகிறது.கோயிலில் உள்ள சன்னதிகள்: கணநாதர் சன்னதி, சூரியன் சன்னதி, வள்ளி தெய்வானையுடன் மூலவர் சன்னதி, சக்கர ஸ்தாபனம் சன்னதி, சண்முகர் சன்னதி, தெய்வானை சன்னதி, வள்ளி சன்னதி, சனீஸ்வரன் சன்னதி, மேற்கு நோக்கிய வான்மீக நாதர் சன்னதி, புண்ணிய காருண்ய அம்மன் சன்னதி சிதம்பர சுவாமிகள் சன்னதி, காசி விஸ்வநாதர் & விசாலாட்சி சன்னதி, துர்கை அம்மன் சன்னதி, பைரவர் சன்னதி, இடும்பன் & கடம்பன் சன்னதி ஆகியவையாகும்.

கோயில் வழிபாடுகள் தினசரி ஆறு கால பூஜைகள்:  சித்திரை மாதத்தில் அன்னாபிஷேகம், வசந்த உற்சவம், வைகாசி விசாகத்தில் சிதம்பர சுவாமிகள் குருபூஜை, ஆனி மாதத்தில் நடராஜருக்கு திருமஞ்சனம், ஆடி மாதக் கிருத்திகை, ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கந்தசஷ்டி, கார்த்திகை தீபம் (சொக்கப்பனை கொளுத்துதல்), மார்கழி ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம்.

கோயில் திருவிழாக்கள்:   சித்திரை மாதத்தில் 10 நாட்கள் வசந்த உற்சவம், மாசி மாதத்தில் 13 நாட்கள் பிரம்மோற்சவம், ஐப்பசி மாதத் தில் 6 நாட்கள் கந்தசஷ்டி உற்சவம், ஆடி, மாசி, சித்திரை கிருத்திகை விழாக்கள் தல விருட்சம்: இக்கோவி லின் தல விருட்சமாக வன்னிமரம் உள்ளது. குழந்தைப் பேறு, திருமணத் தடை, தீராத வயிற்று வலி ஆகியவற்றுக்கு தீர்வாக இம்மரத்தில் கயிறு கட்டி வேண்டுதல் வழக்கமாக உள்ளது. இவ்வாறு செய்தால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம். திருக்குளம்: இக்கோயி லின் தென் திசையில் சரவணப்பொய்கை எனப்படும் தீர்த்தம் நீள் சதுர வடிவில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் இரண்டாவது பட்டமான சிவசங்கரதேவர் இதை உருவாக்கினார். 350 அடி நீளமும், 350 அடி அகலமும் கொண்ட இக்குளத்தில் 16 கிணறுகளும், வள்ளையார் ஓடை என்ற ஓடையும் உள்ளது. குளத்தின் நடுவே 16 தூண்கள் கொண்ட அழகிய நீராழி மண்டபம் கோயிலின் எட்டாவது பட்டமான முருகே தம்பிரான் சுவாமிகள் காலத்தில் கட்டப்பட்டது. இத்திருக்குளம் 400 ஆண்டுகளாக வற்றாத ஜீவநதியாக இருப்பது இதன் சிறப்பு. இக்குளத்தில் ஆண்டுக்கு இரு முறை கந்தசுவாமியின் தெப்ப உற்சவம் நடக்கிறது.

OUR SHOPPY SPLOUR LINKS

.  

LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


OUR POPULAR LINKS


Blazing titles
RECENT UPDATE
​​


​    @Shri online shopping