OUR POPULAR LINKS






Blazing titles




RECENT UPDATE








​​


​    @Shri online shopping

OUR LINKS

.  





LATEST NOVELS .VISIT    WWW.ILLANTHALR.BLOGSPOT.COM


  

















Leave  Ur comment:

​​​​

Total Visitors






 

   Like Us









​​ Copyright  @ Illanthalir.com

​ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்:

முக்திபேறு அருளும் காசிக்கு இணையாக காவிரி கரையில் திருவெண்காடு, திருவையாறு, வேதாரண்யம், மாயூரம், திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம் ஆகிய 6 தலங்கள் உள்ளன. இவற்றுள் காசியை விட நூறு மடங்கு பெருமை வாய்ந்த தலம் ஸ்ரீவாஞ்சியம். எம்பெருமான் இங்கு சுயம்பு லிங்கமாக வீற்றிருந்து அருளாசி புரிந்து வருகிறார். 

​​







தல அமைவிடம் :  

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீவாஞ்சியம் கிராமம். கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகப்பட்டினம் செல்லும் மார்க்கத்தில் அச்சுதமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 1/2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 
தலவரலாறு :  
திருமால் சிவபெருமானை பூஜித்து திருமகள் தம்மிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்ற திருத்தலம் என்ற பெருமையை பெற்றது. திருமகளை வாஞ்சித்து பெற்றதால் திருவாஞ்சியம் என்று பெயர் பெற்றது. பக்தர்கள் தங்களுடைய பாவங்களை போக்கிக்கொள்ள காசியில், கங்கை நீராடி இறைவனை வழிபடுகின்றனர். 
கங்கை இறைவனிடம், என்னில் நீராடி எல்லோரும் தங்கள் பாவங்களை நீக்கிக் கொள்கிறார்கள், நான் எப்படி புனிதமாவது?' என்று இறைவனை வேண்டியது. அப்போது இறைவன், எமன் புனிதமடைந்த இந்த இடத்தில் தங்கி வழிபட சொன்னார். கங்கை தன்னுடைய ஒரு பகுதியை அங்கு விட்டு விட்டு இங்கு இறைவனை வழிபட்டு புனிதம் அடைந்தாள். 
புனித தீர்த்தம்: 
இதனால் இங்குள்ள தீர்த்தத்துக்கு 'குப்த கங்கை' என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடுவது சிறப்பு. குப்த கங்கையில் நீராடி, பித்ரு காரியங்களை செய்தால் பித்ருக்களுக்கு முக்தி கிட்டும். காசி, கயாவில் பித்ரு காரியம் செய்ததற்கு ஓப்பாகும்.   

தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை தவிர மற்ற அனைத்து தேவர்களும், ரிஷிகளும், சூரியனும் கலந்து கொண்டார்கள். இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி சிவன் தடுத்தும் கேளாமல் யாகம் நடக்கும் இடத்திற்கு கோபத்துடன் சென்றாள். 
அங்கு யாகத்திற்கு வந்த தேவர்கள், முனிவர்கள் மற்றும் தட்சனும் அழிந்து போக சாபம் கொடுத்து விட்டு யாகத்தீயில் விழுந்து மாண்டாள். தாட்சாயிணி உயிர் துறந்ததை அறிந்த சிவன் கடுங்கோபம் கொண்டு பலம் கொண்ட வீரபத்திரனை அனுப்பி யாகத்தை அழித்து தண்டிக்கச் சொன்னார். 
வீரபத்திரன் தன் கணங்கள் சூழ, யாக சாலை அடைந்து அனைவரையும் அடித்து நொறுக்கி இல்லாமல் செய்தார். சூரியனின் கன்னத்தில் அறைய சூரியனின் பற்கள் எல்லாம் கீழே கொட்டின. பின்னர் மகா விஷ்ணுவின் வேண்டுதல் பேரில் கோபம் குறைந்தார். 









பாவம் நீங்கும் தலம் : 
சிவன் அங்கு தோன்றி தவறு செய்தவர்களை மன்னித்து


உயிர்ப்பித்தார். பற்கள் இல்லாத சூரியனின் பாவம் தீர, ஸ்ரீவாஞ்சியத்தில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் வழிபட்டால் தூய்மை வரும், சிவத்துரோகத்தால் வந்த பாவம் போகும் என்று சிவன் வழி சொன்னார். 

அவ்வாறே ஸ்ரீவாஞ்சியம் வந்து முனி தீர்த்தம் என்ற குப்த கங்கையில் நீராடி கார்த்திகை மாதம் முழுவதும் தவம் செய்து இறைவனை வணங்கினார் சூரியன். இதனால் மகிழ்ந்த சிவன் அவன் முன் தோன்றி பாவம் நீக்கி பழைய ஒளியை தந்தார். அத்தோடு கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் நீராடியவர்களில் பஞ்சமா பாவங்களும் மன்னிக்கப்படும் என்றும் அருள்புரிந்தார். 
எமதர்மன்: 
இங்கு எமனுக்கு தனி சன்னிதி உண்டு. மற்றவர்கள் உயிரை பறிப்பதே தன் வேலையாக இருக்கிறதே என்று திருவாரூர் இறைவனிடம் எமன் முறையிடுகிறார். சிவபெருமான் எமனிடம் ஸ்ரீவாஞ்சியம் சென்று அங்கு இறைவனை வழிபட்டு தவத்தில் இருக்க சொல்கிறார். 
அவ்வாறு எமன் ஸ்ரீவாஞ்சியம் வந்து இறைவனை தொழுது தவம் இருக்கையில் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஸ்ரீவாஞ்சிநாதர் அவன் முன் தோன்றி கீழ்க்கண்டவாறு வரம் அளித்தார். 'மக்கள் தங்கள் வயது முதிர்வனாலும், நோய்களினாலும் இறப்பார்கள். 
யார் ஒருவர் இங்கு வந்து உன்னை வணங்கி வழிப்படுகிறார்களோ அவர்கள் பாவம் நீங்கி மறுபிறப்பு இல்லாமல் அமைதியாக இறப்பார்கள். உன்னை வணங்கிய பின் தான் என்னை வணங்க வேண்டும். அவர்கள் மறுபிறப்பு இல்லாத அமைதியான இறப்பு ஏற்படும். அதற்கு பொறுப்பு நீ ஆக மாட்டாய்'. இவ்வாறு சிவன் பெருமான் கூறினார். 













இதனால் தான் இந்தக்கோவிலில் முதல் பூஜை எம தர்மராஜனுக்கு நடக்கிறது. மேலும், சிவபெருமானை எமன் வழிபட்ட தலம் என்பதால் இங்கு எமனுக்கு தனி சன்னிதி உள்ளது. சித்திரகுப்தர் இங்கு உள்ளார். எமதர்மராஜாவோ இங்கு சுவாமிக்கு வாகனமாக உள்ளார். எமபயம், பைரவ உபாதை நீங்கும் தலம் இது. 


இங்கு இறைவன் பெயர் வாஞ்சிநாதர். சுயம்புலிங்கம். இறைவியின் நாமம் மங்களாம்பிகை. சகல பாக்கியங்களையும் தருபவள் 'பாக்யா நாயகி' என்றும், மங்களங்களை செய்வதால் 'மங்களாம்பிகை' என்றும், கைலாயத்தில் இருந்து ஈஸ்வரனுடன்


ர்ந்து திருவாஞ்சியம் வந்ததால் 'கவுரீ' எனவும், தானே


விரும்பி இத்திருத்தலத்தில் விஸ்வேச்சுவரருடன், வாழ வந்ததால் 'வாழ வந்த நாயகி' எனவும், 'கல்யாணி' என்றும் பல பெயர்களால் துதிக்கப்பட்டு வருகிறாள். 
மாலையில் அம்பிகைக்கு வெண்பட்டு உடுத்தி, கலைவாணியாக துதிக்கின்றனர். இவரை வணங்கினால் கல்வியும், செல்வமும், புகழும் மேம்படும் என்று சாம்பவ புராணம் கூறுகிறது.   

ராகு-கேது: 
மகா விஷ்ணுவின் மோகினி அவதாரத்தால் வெட்டுப்பட்ட ராகு, கேது இருவரும் அமிர்தம் பருகியதால் தேவ அந்தஸ்து பெற்றனர். 2 கிரகங்களுக்கும் தனித்தனி தலங்கள் இருப்பினும் திருவாஞ்சியத்தில் இருவரும் ஒரே மூர்த்தியாக இணைந்து வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 
இருகிரக பரிகாரங்களையும் இங்கே செய்யலாம். இந்த அமைப்பு 'சண்ட ராகு' என வழங்கப்படுகிறது. இங்கு துர்க்கை அஷ்ட புஜங்களுடன் மகிஷாசுரமர்த்தனியாக காட்சி அளிக்கிறாள். 108 தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வேண்டியது கிடைக்கும். 21 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் மலரிட்டு வழிபடுவோர் எண்ணியது நடக்கும். 
பைரவர் : 

திருவாஞ்சியம் திருத்தலத்தில் பைரவர் மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் யோக பைரவராக காட்சி அளிக்கின்றனர். இவர் சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர். நரம்பு சம்பந்தப்பட்ட எந்த வியாதிகள் இருந்தாலும் நெய்யினால் தயார் செய்யப்பட்ட வடை மாலை சாத்தி அபிஷேகம், அர்ச்சனை செய்தால் வியாதி நிவர்த்தியாகி மன நிம்மதி பெறலாம். 
இக்கோவிலில் நாயன்மார்கள், நால்வராலும் பாடல் பெற்றுள்ளது. இதைத்தவிர அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோராலும் பாடல் பெற்றுள்ளது. கார்த்திகை மாதம் ஞாயிறு நட்சத்திரம் மற்றும் திங்கட் கிழமைகளும், மாசி மாதம் தீர்த்தவாரி, மார்கழி மாதம் ஆருத்ரா நாட்கள் விசேஷமான நாட்கள் ஆகும்.
கோவில் அமைப்பு :
ஸ்ரீவாஞ்சியம் கிராமத்தின் கிழக்கு புறத்தில் நான்கு மாட வீதிகளுடன் கிழக்கு புறம் சூரியனை பார்த்த நிலையில் உள்ளது. 5 நிலைக்கொண்ட கோவில் 110 அடி உயர ராஜகோபுரம். கோவிலின் வடபுறம் புனித தீர்த்தக்குளம். குளத்தில் நீராடி கங்கைக்கரை திரும்பினால் தென்புறத்தில் எமதர்மராஜன் சன்னிதி, அருகில் சித்ரகுப்தன் நின்ற கோலம். 
2-ம் நிலை நுழைவு வாயிலில் இடது புறம் அபயங்கர விக்னேஸ்வரரும், வலது புறம் பால முருகனும் அருள்பாலிக்கின்றனர். கோவிலின் உள்ளே நுழைந்தால் இடதுபுறம் நட்டுவர் விநாயகர் சன்னிதி, வலதுபுறம் மாறாத மணத்தை உடைய கூந்தலை கொண்டு விளங்கும் மங்கள நாயகி என வழங்கும் மங்களாம்பிகை சன்னிதி உள்ளது. 
மூன்றாம் சுற்றில் முன் மண்டபத்தில் ஒரு நந்தியும் உள்ளது. அடுத்து மகா மண்டபத்தில் துவார பாலகர்கள். கருவறையில் அகில உலகமெல்லாம் ரட்சித்து அருள்பாலிக்கும் வாஞ்சிநாத சுவாமி அமர்ந்துள்ளார். 
இறைவனை தரிசித்து வலது புறமாக வந்தால் வெளிச்சுற்றில் சோமாஸ்கந்தர் சன்னிதியும், பின் தென் திசை நோக்கி தட்சிணாமூர்த்தியும், கிழக்கு நோக்கி காசி விஸ்வநாதர் சன்னிதியும் தனித்தனியே ஒரே மண்டபத்தில் அமைந்துள்ளது. 
மேற்கு பிரகாரத்தில் சந்திர மவுலீஸ்வரர் மற்றும் கன்னி மூலை கணபதி, பின் சட்டநாதர், மீனாட்சி, சொக்கநாதர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முகர் அஷ்டலிங்கங்களுடன் மகா லட்சுமியும், தனி தனி சன்னிதியில் வீற்றிருக்கின்றனர். 
தென்திசை நோக்கி சனீஸ்வரரும், புகழ்பெற்ற பஞ்ச லிங்கங்களும், வடக்கில் துர்க்கையும் அமைந்துள்ளன. வடக்கு சுற்றில் சண்டிகேஸ்வரரும், அதனை அடுத்து கிழக்கு நோக்கி மகிஷாசுரமர்த்தினி சன்னிதியும் அமைந்துள்ளது. சூரியன், சந்திரன் யோக நிலையில், பைரவர் மற்றும் ஒரே சிற்பத்தில் அமைந்துள்ள ராகு, கேது சன்னிதி அமையப்பெற்றுள்ளது. 
அருகில் நடராசர் சன்னிதி உள்ளது. இவ்வகையில் 3 கோபுரம், 3 சுற்றுச்சுவர்களுடன் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து இருக்கிறது ஸ்ரீவாஞ்சியம் திருக்கோவில்.  ​

OUR SHOPPY SPL